திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத் துத்துறை அலுவலர்களு டன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க தற்காலிக முகாம்கள் 188 அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் அமைக்கப்படும். கடலோர பகுதிகளில் 7 பல்நோக்கு மைய கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன.
மாவட்டத்தில் சராசரியாக 61.93 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பிரதான அணைகளான பாப நாசம், சேர்வலாறு அணைகளில் 72 சதவீதமும், மணிமுத்தாறு அணையில் 53 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. பயிர் சேதம் ஏற்படும்பட்சத்தில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலர் கள் ஒன்றிணைந்து தணிக்கை செய்து, அரசுக்கு அறிக்கை அளித்து உடனடியாக நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் தொடர்பான தகவல் களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 0462-2501012 மற்றும் 0462-2500191 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண்கள் விவரம்: ஆட்சியர் அலுவலகம்- 6374001902, வட்டாட்சியர் அலுவலகங்கள்: திருநெல்வேலி- 9445000671, பாளையங்கோட்டை- 9445000669, மானூர்- 9442214727, சேரன்மகாதேவி- 9751501322, அம்பாசமுத்திரம்- 9445000672, நாங்குநேரி- 9080589731, ராதாபுரம்- 9677781680, திசையன்விளை- 9944306770. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago