திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘கற் போம், எழுதுவோம்’ இயக்கத்தின் வட்டார அளவிலான தன்னார்வலர் களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வி இயக்குநரகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப் படை கல்வியறிவை வழங்குவதற்காக கற்போம், எழுதுவோம் இயக்கம் சார்பில் வட்டார அளவில் தன்னார்வலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, "தமிழகத்தில் எழுத்தறிவில்லாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கவே இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பை அடிப்படையாக கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியா தவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்குவது, பிழை யில்லாமல் எழுதுவது, படிப்பது ஆகியவற்றை கற்றுத்தர நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 2030-ம் ஆண்டு வரை புத்தாண்டு திட்டமாக மத்திய, மாநில அரசுகள் நிதி பங்களிப் புடன் இத்திட்டம் செயல் படுத்தப் படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத் தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 2020-21-ம் ஆண்டுக்கான முதல் இலக்காக 5,539 பேர் நிர்ணயிக்கப் பட்டுள்ளனர்.
சுமார் 316 தன்னார்வல ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப் படும். 20 நபர்களுக்கு ஒரு கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வல ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மதிப்பூதியம் இல்லா விட்டாலும், 20-க்கும் மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களை தேர்ச்சிபெற செய்யும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ், விருது வழங்கி கவுர விக்கப்படுவார்கள்.
ஒரு கல்வியாண்டில் மொத்த மாக 3 கட்டமாக பிரித்து 4 மாதங்களுக்கு கற்பிக்கப்படும். ஒரு நாளைக்கு 2 மணிநேரம் கற்பிக்கப்படும். ஒவ்வொரு கட்டத்தின் இறுதியிலும், ஆண்டுக்கு 3 முறைஇறுதி மதிப்பீட்டு தேர்வு நடத்தப் படும். கற்போரின் சூழ்நிலையைப் பொறுத்து அவரவர் பணி செய்யும் இடத்திலேயே கல்வி கற்பிக்கப் படும். இதற்கான பிரத்யேக கைபேசி செயலி விரைவில் பயன் படுத்தப்படும். கல்வி கற்க விரும்புவோர் இந்த கற்றல் வகுப்பில் சேர்ந்து எழுதுதல், படித்தல், கையெழுத்திடல் போன்றவைகளுக்கு பல்வேறு இடங்களில் பயனுள்ளதாக இருக்கும்.
கரோனா ஊரடங்கு விதிமுறை களை பின்பற்றி இந்த இயக்கம் செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் அறிவொளி இயக்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது போல இந்த இயக்கமும் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, வட்டார கல்வி அலுவலர்கள் உதயசங்கர், தென்னவன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago