ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை தனியார் திருமண மண்டபம், அந்தியூர், தாளவாடி, ஈரோட்டில் உள்ள பள்ளிகள் என ஒன்பது இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி 63 பேரும், 15-ம் தேதி 59 பேரும், 16-ம் தேதி 64 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (17-ம் தேதி) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 பேராகக் குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 704 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 ஆயிரத்து 50 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 136 பேர் இறந்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை காலத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தனர்.
இதன் காரணமாக கரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பண்டிகை காலத்திற்கு பின்னர் பரிசோதனைகளில் மீண்டும் கரோனா தொற்று பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பதைப் பொறுத்து சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago