கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் ரெங்கநாதபுரம் ஊராட்சி வளையல்காரன்புதூரில் கால்நடை பாதுகாப்புதிட்ட முகாம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சு.மலர்விழி கால்நடைகளுக்கு மருந்துகளை செலுத்தி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்ற கால்நடைகளில் நல்ல நிலையில் பராமரிக்கப்படும் சிறந்த கலப்பின கன்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, “கரூர் மாவட்டம் முழுவதும் இதேபோல ஜன.24-ம் தேதி வரை மொத்தம் 72 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. ஒரு கிராமத்துக்கு ஆடு, மாடு, கோழி என 1,000 கால்நடைகள் வீதம் மொத்தம் 72,000 கால்நடைகளுக்கு இம்முகாம்களில் பரிசோதனை செய்து சிகிச்சையளிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. முகாமுக்கு கொண்டு வரப்படும் கால்நடை களில் நல்ல நிலையில் பராமரிக் கப்படும் சிறந்த கலப்பின கன்று கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கால்ந டைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்” என்றார்.
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ் ணன், உதவி இயக்குநர்கள் சரவணக்குமார், முரளிதரன், லில்லி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அ.சந்திரமதி, ரெங்கநாதபுரம் ஊராட்சித் தலைவர் சசிக்குமார், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகுடீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago