பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக புதிய கரோனா தொற்றாளர்கள் இல்லை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக புதிய கரோனா தொற்றா ளர்கள் கண்டறியப்படவில்லை என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதா ராணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியா ளர்களிடம் நேற்று கூறியது:

பெரம்பலூர் மாவட்டம் கரோனா தொற்றாளிகள் இல்லாத மாவட்டம் என வெளியாகி உள்ள தகவல் தவறானது. இன்றைய(நேற்று) நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.16, 17 ஆகிய இரு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை களின் முடிவில் புதிதாக ஒருவருக்கு கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதை வைத்து தொற்று இல்லாத மாவட்டம் என தவறான தகவல் பரவி விட்டது.

ஒரு மாவட்டத்தில் தொடர்ச்சி யாக 28 நாட்கள் கரோனா தொற்று பரிசோதனை முடிவு பூஜ்யமாக இருந்தால்தான், அந்த மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டம் என அறிவிக்க முடியும்.

இந்நிலையில் ஓரிரு நாட்கள் மட்டும் கரோனா தொற்று இல்லை என்பதை வைத்து பெரம்பலூரை கரோனா தொற்றாளிகள் இல்லாத மாவட்டம் என அறிவிக்க முடியாது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்