திமுக தென்காசி மாவட்ட பொறுப்பாளர்கள் சிவ பத்மநாதன், ஆ.துரை, மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழநி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் பிரதிநிதி அருணாசலம், விசிக மாவட்டச் செயலாளர் டேனிஅருள் சிங், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் முகம்மது யாகூப், தமுமுக மாவட்ட தலைவர் அகமது ஷா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் புதிய ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, ஆட்சியரிடம் சிவ பத்மநாதன் அளித்த மனுவில், “கரோனா தொற்று காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க கடந்த
9 மாதங்களாக தடை நீடிக்கிறது. தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் சென்று வர அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், குற்றாலத்தில் மட்டும் இன்னும் தடை நீடிக்கிறது. கரோனா தொற்று பெருமளவில் குறைந்துவிட்டதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் சென்று வரும் பாதை தகர ஷீட்களால் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனை அகற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago