சாலைகளை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி டவுன் வாகையடிமுனையில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை வகித்தார். திருநெல்வேலி டவுனில் 4 ரதவீதி சாலை உள்ளிட்ட மழையால் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சாலையில் அபாய பள்ளம்

திருநெல்வேலி மாவட்ட பொதுஜன பொதுநலச் சங்கத் தலைவர் எம்.முஹம்மது அய்யூப் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:

திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் முக்கிலிருந்து பேட்டை மற்றும் வழுக்கோடை வழியாக செல்லும் வாகனங்கள் காட்சி மண்டபத்தை கடந்துதான் செல்ல வேண்டியதுள்ளது. மண்டபத்தின் மத்திய பகுதி தூண்கள் சேதமடைந்து ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக அடைத்தே வைக்கப்பட்டுள்ளதால், இரண்டு பக்க ஒடுக்கமான பாதையின் வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன. அதில் ஒரு பக்க பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அபாய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் கடந்து செல்கின்றன. மழைநீர் நிரம்பிவிட்டால் பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து வருபவர்களும், வாகனத்தில் வருபவர்களும் கீழே விழுந்து எழுந்து செல்லும் பரிதாப நிலையை அன்றாடம் காண முடிகிறது. இந்த சாலையை தற்காலிகமாக சீரமைத்து வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்