திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 28 ஏரிகள் வழியாக 4,498.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் இருந்து, பாசனத் துக்காக தண்ணீரை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று திறந்துவைத்தார்.

செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்துக் காக தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 12 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அணையில் இருந்து தண்ணீரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார். அதன்படி, வரும் 29-ம் தேதி வரை 12 நாட்களுக்கு என 252.26 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறும்போது, “குப்பநத்தம் அணையில் 392.80 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவை, அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்புக்கு 135.51 மில்லியன் கன அடி தண்ணீர் தேவை. எனவே, மீதமுள்ள 257.29 மில்லியன் கனஅடி தண்ணீரில் பாசனத்துக்காக 252.26 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் 28 ஏரிகள் வழியாக 4,498.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பாசன நீரை சிறப்பாக பயன் படுத்தி நல்ல விளைச்சல் பெறுமாறுவிவசாயிகளை கேட்டுக் கொள் கிறேன். மேலும், பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று துரிஞ்சிகுப் பம் கிராமத்தில் 105 குடும்பங் களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்