வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப் படை வசதிகள் உள்ளனவா? என்பதை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதனடிப்படையில், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேருந்து நிலையத்தில் பயணி களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், மழைநீர் வெளியே செல்ல முடியாததால் ஆங்காங்கே குட்டைப் போல் தேங்கி நிற்பதும் தெரியவந்தது. இதனால் கால்வாய் வசதிகளை சீரமைக்க வேண்டும் என்றும், பழைய பேருந்து நிலையத்தில் நவீன அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் குமரவேல், ஆய் வாளர் ரவிக்குமார் மற்றும் குழுவினர் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, பயணிகள் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் வைப்பது குறித்தும் கால்வாய்களை சீரமைப்பது, நவீன பேருந்து நிறுத்தம் அறிவிப்பு பலகைகள் வைப்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விரைவில், பழைய பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலை யத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தித் தரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago