கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களான ஆட்சியர் கள் வெளியிட்டனர்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான ஆட்சியர் கிரண் குராலா நேற்று வெளியிட்டார்.
அதன்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண் ணிக்கை 10 லட்சத்து 80 ஆயிரத்து 525 வாக்காளர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 43 ஆயிரத்து 472, பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 851, இதரர் 202.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய வரைவு வாக்காளர்பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டார்.
அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை. 16 லட்சத்து 48 ஆயிரத்து 361. இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 519. பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 30 ஆயிரத்து 644, இதரர் 198.
விழுப்புரம் மாவட்டத்தில்
இளம் வயது வாக்காளர்கள் குறைவு
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த 24,68,000 பேர் உள்ளனர். தற்போதைய வாக்காளர்களில் இளம்வயது வாக்காளர்கள் குறைவாக இருக்கிறார்கள். 20 முதல் 29 வயது வரை 64 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளனர். அதேபோல், 30 முதல் 39 வயது வரை 30 ஆயிரம் பேரும் வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினரும், இவர்களை வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, தேர்தல்ஆணையத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தெரிவித்திருக்கிறார். கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர் கள் எண்ணிக்கை. 20 லட்சத்து 82 ஆயிரத்து 840 வாக்காளர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 28 ஆயிரத்து 380. பெண் வாக்காளர்கள்10 லட்சத்து 54, ஆயிரத்து 308, இதரர் 152.
புதுச்சேரி வரைவு பட்டியலில் 9,74,754 வாக்காளர்கள்
புதுச்சேரி
புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் கூறுகையில், ‘‘வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதுச்சேரி மாநிலத்தில் ஆண்கள்-4,58,989 பேர், பெண்கள் -5,15,660 பேர், மூன்றாம் பாலினத்தவர் -105 பேர் என மொத்தம் 9,74,754 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் உள்ள 30 தொகுதி களில் 952 வாக்குச்சாவடிகள் உள்ளன. வில்லியனூர் தொகுதியில் அதிகபட்சமாக 40,617 வாக்காளர்களும், உருளையன் பேட்டை தொகுதியில் குறைந்த பட்சமாக 24,092 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அனைத்து வாக்குச் சாவடிக ளிலும் பணியில் உள்ள அதிகாரிகள் அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை மக்கள் பார்வைக்கு வைத்திருப்பதுடன் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் படிவங்களை பெற்றுக் கொள்வார்கள். மேலும், இந்த சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று பெயர் சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்பு, மாற்றங்களுக்கான விண் ணப்பங்கள் பெறப்பட்டு, நேற்று அந்தந்த மாவட்டத் தலைநகர்களில் சட்டமன்றத் தொகுதி வாரியாக இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது
2021 வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தப் பணிகளின் கீழ் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் கீழ் நவ.16 முதல் டிச.15 வரை அலுவலக வேலை நாட்களில் மனுக்கள் பெறப்படும்.
இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 1950 -யைத் தொடர்பு கொண்டுவிவரங்களை பெற்றுக் கொள்ள லாம்.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் 5.1.2021 அன்று முடிவு செய்யப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல் 20.1.2021ம் தேதி வெளியாகும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago