ஈரோட்டில் வரும் 20-ம் தேதி வேல் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கந்தசஷ்டி கவசத்தை அவமதித் தவர்களைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வேல்யாத்திரையை பாஜக நடத்தி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி வரும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், சம்பத் நகரில் இருந்து வேல் யாத்திரையைத் தொடங்குகிறார்.
வேல் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிர மணியம் தலைமை தாங்கினார். எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில துணை தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தீபக் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் குணசேகரன், விவேகானந்தன், துணைத் தலைவர் சின்னதுரை, இளைஞரணி தலைவர் கோபால கிருஷ்ணன், மகளிர் அணி தலைவி புனிதம் அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேல் யாத்திரை குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெரும் திரளான பொது மக்களை பங்கேற்கச் செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago