தி.மலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தி.மலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய கந்தசாமி, குறைதீர்வு தனி அதிகாரியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, தூக்குக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். அவர், நேற்று முன்தினம் மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, ஆட்சி யர் அலுவலகத்தில் தனது பணியை நேற்று காலை தொடங்கினார்.

அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடை பெற உள்ளது. அதனை சிறப்பாக நடத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என தெரிவித்துள்ள னர். ஏற்கெனவே அறிவிக்கப்பட் டுள்ள நிலையான செயல்முறை அடிப்படையில், விழா சிறப்பாக நடத்தப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், பக்தர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். கரோனா தொற்று பரவல் இருப்பதால் சமூக இடை வெளியை பக்தர்கள் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா தொற்று பரவல், மாவட்டத்தில் தற்போது குறைந்து வருகிறது.

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு செல்ல முழு முயற்சி எடுக்கப் படும். மாவட்டத்தின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து கேட்ட றிந்து நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை காலத்தில் அதிகளவில் மழை பெய்தால், கால்வாய்களை தூர் வாரவும், தண்ணீர் தேங்காமல்இருக்கவும் நடவடிக்கை எடுக்கப் படும். பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக, எப்போதுவேண்டுமானாலும் அலுவலகத் தில் என்னை சந்திக்கலாம். அவர் கள் முன் அனுமதி பெற தேவையில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்