கடலூர் மத்திய சிறையில் கைதிக ளுக்கு கஞ்சா சப்ளை செய்த சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் கேப்பர் குவாரி மலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 1,500- க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இங்கு 2-ம் நிலை சிறைக்காவ லராக உள்ள சுரேஷ்குமார் என்பவர் கடந்த 13-ம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு செல்ல கிளம்பினார். அப்போது அவர், கைதிகள் அறை பகுதியில் சுமார் 5 கிராம் கஞ்சா பொட்டலத்தை வீசி சென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த 2 நாட்களாக அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனு பவித்து வரும் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த கைதிக்கு அவர் கஞ்சா விநியோகம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறைக்காவலர் சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago