நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணையின் மூலம் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகி றது. பல்வேறு குடிநீர் திட்டங்களுக்குத் தேவையான நீரும் அணையிலிருந்து எடுக்கப்படு கிறது. பவானிசாகர் அணையில் 105 அடிவரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், அந்தந்த பகுதிகளில் உள்ள அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆனால், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவால், அணைக்கான நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைந்து காணப் பட்டது.

இந்நிலையில், நேற்று அணைக் கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை அணைக்கான நீர் வரத்து 948 கன அடியாக இருந்த நிலையில், தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணிக்கு நீர் வரத்து 3157 கனஅடியாக அதிகரித்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.54 அடியாக இருந்தது.

அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்துக்காக 800 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்