திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் பரவலாக மழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக லேசான முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் பலத்த மழையும், தீபாவளியன்று லேசான மழையும் பெய்தது.

நவ.14-ம் தேதி தீபாவளியன்று காலை நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 12.59 மி.மீ மழை பதிவானது.

அன்று மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

திருச்சி மாநகர் 45, ஜங்ஷன் 44, பொன்மலை 35, நவலூர் குட்டப்பட்டு 26, புள்ளம்பாடி 17.40, லால்குடி 17, பொன்னணியாறு அணை பகுதி 15.60, மருங்காபுரி 15.20. தொடர்ந்து, நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீட்டரில்): வாத்தலை அணைக்கட்டு பகுதி 8.2, துறையூர், தேவிமங்கலம் தலா 5, முசிறி 3, மணப்பாறை 2.2, பொன்னணியாறு அணை பகுதி 1.1.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும், நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு(மி.மீட்டரில்):

பஞ்சப்பட்டி 12, அரவக்குறிச்சி 10, அணைப்பாளையம் 7, தோகைமலை 5, கரூர் 4.40, கிருஷ்ணராயபுரம் மற்றும் மாயனூர் தலா 4, குளித்தலை 3. மாவட்டத்தில் சராசரியாக 4.12 மி.மீட்டர் மழை பதிவானது.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், அரியலூர், உடை யார்பாளையம், தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, பொய்யாதநல்லூர், மீன்சுருட்டி, திருமழபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. பகலில் அவ்வப்போது வெயிலும் காணப்பட்டது. மழையின் காரணமாக சாலையோரங்களில் மழைநீர் ஓடியது. இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்