கரூர் மாவட்ட குக்கிராமங்களில் நவம்பர் முதல் ஜனவரி வரை 72 சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் நவம்பர் முதல் 2021 ஜனவரிக்குள் கரூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் 72 சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில் செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, தடுப்பூசி பணிகள், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகள் கால்நடைகளுக்கு வழங்கப்பட உள்ளன.
இங்கு கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புக்கலவை இலவசமாக வழங்கப்படும். சிறந்த முறையில் கலப்பின கிடேரி கன்றுகளை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. எனவே, விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இம்முகாம்கள் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago