பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் 42 களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, வீடு வீடாகச் சென்று, டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கொசுப் புழுக்கள் உருவாகாத வண்ணம் தங்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதற்கு தேவையான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், வாகனத்தில் பொருத்திய ராட்சத இயந்திரத்தின் மூலம் புகை மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, நகரில் அனைத்துப் பகுதிகளிலும் நகராட்சிப் பணியாளர்கள் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை தூர் வாரி, சுத்தம் செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago