தீபாவளியையொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.16 கோடிக்கு மதுபானம் விற்பனை

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் ரூ.16.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி யுள்ளன.

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3-ஆக பிரிக்கப்பட்டா லும், டாஸ்மாக் நிர்வாகத்தை பொருத்தவரை வேலூர், அரக் கோணம் என 2 கோட்டமாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில், வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 108 மதுபானக் கடைகளும், அரக்கோணம் கோட் டத்தில் 88 கடைகளும் இயங்கி வருகின்றன. தினசரி கோடிக்கணக் கில் மதுபானங்கள் விற்பனை செய் யப்பட்டாலும், பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள், டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.

அதன்படி, தீபாவளி பண்டிகை யையொட்டி கடந்த வெள்ளிக் கிழமையும், தீபாவளி பண்டிகை யான சனிக்கிழமை அன்று டாஸ்மாக் மதுபானக்கடைகளில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகமாகவே காணப் பட்டது.

வேலூரில் அதிக விற்பனை

தீபாவளி பண்டிகையை மகிழ்ச் சியுடன் கொண்டாட விரும்பிய மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை களில் போட்டிப்போட்டு மது பானங்களை வாங்கிச்சென்றனர். தீபாவளி பண்டிகை என்பதால் மதுபான பாட்டில்களை தேவைக்கு ஏற்ப விற்பனைக்காக அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டி ருந்தது.

இதில், அரக்கோணம் கோட் டத்தை காட்டிலும் வேலூர் கோட்டத்தில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வெள்ளிக் கிழமை அன்று ரூ. 4 கோடியே 55 லட்சத்துக்கும், தீபாவளி பண்டிகையான சனிக்கிழமை அன்று 5 கோடியே 12 லட்சம் என மொத்தம் 9 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

அதேபோல், அரக்கோணம் கோட்டத்தில் உள்ள 88 கடைகள் மூலம் வெள்ளிக்கிழமை அன்று ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கும், சனிக்கிழமை அன்று ரூ.3 கோடியே 21 லட்சம் என மொத்தம் 6 கோடியே 41 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

இதன் மூலம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமை என 2 நாட்களில் மட்டும் ரூ.16 கோடியே 08 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்