திருவண்ணாமலைக்கு வரும் 18-ம் தேதி வருகை தர உள்ள திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் பொது பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்க விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக சார்பில் தமிழக சட்டப் பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்க, தலைவர் மு.க. ஸ்டாலின்தலைமையில் குழு அமைக்கப்பட் டுள்ளது. இக் குழுவினர் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை கவனத் தில் கொண்டு அறிக்கையை தயா ரிக்க மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களின் கருத்துகளை கேட்க உள்ளனர்.
மாவட்டங்களில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து எழுத்துப் பூர்வமாக கொடுக்கப்படும் மனுக்களை பெற திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், தி.மலை மாவட்டத்துக்கு வரும் 18-ம் தேதி வருகின்றனர். திருவண்ணாமலை நகரம் சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் பிற்பகல் 2 மணி முதல் மனுக்களை பெற்றுக் கொள்கின்றனர். அப்போது, தி.மலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், அரசு அலுவ லர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாயிகள், தொழிலதிபர்கள், சிறுவணிகர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர் கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து, திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக அமைந்திட அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago