தி.மலை மாவட்டத்தில் பரவலான மழை சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருவதால் சாத்தனூர் அணை மற்றும் செண்பகத் தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தி.மலை மாவட்டத்தில் ஓரிருநாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரி யாக 15.88 மி.மீ., மழை பெய்துள் ளது. ஆரணியில் 11 மி.மீ., செய்யா றில் 19, செங்கத்தில் 3.40, ஜமுனா மரத்தூரில் 2, வந்தவாசியில் 35,போளூரில் 11.40, தி.மலையில் 9.20, தண்டராம்பட்டில் 16, கலசப் பாக்கத்தில் 13, சேத்துப்பட்டில் 15, கீழ்பென்னாத்தூரில் 41.60, வெம்பாக்கத்தில் 14 மி.மீ., மழை பெய்துள்ளது.

தொடர் மழை காரணமாக, தி.மலை மாவட்டத்தில் உள்ள 4 அணைகளும் மெல்ல மெல்ல நிரம்பி வருகிறது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 86.40 (மொத்த உயரம் 119 அடி) அடியாக உள்ளது. அணையில் 2081 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை பெய்வதால், அணைக்கு விநாடிக்கு 213 கனஅடி தண்ணீர் வருகிறது. அணைப் பகுதியில் 11.40 மி.மீ., மழை பெய்துள்ளது.

இதேபோல், செண்பகத்தோப்பு அணைக்கும் விநாடிக்கு 71 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 62.32 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 39.49 அடியாக உள்ளது. அணையில் 101.27 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. மேலும், 60 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. அணையில் 395.90 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 6.56 அடியாக உள்ளது. அணையில் 17.669 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்