விழுப்புரத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் நிறைந்த நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, கே.கே.ரோடு திரு.வி.க. சாலை, திருச்சி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று மக்கள் குவிந்தனர். கரோனா தொற்றின் தாக்கம் உணராமல், சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனர்.

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து ஸ்தம்பித்தது.திண்டி வனம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று கடைவீதிகளில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்