வெறிச்சோடியது தீபாவளி ஆட்டுச் சந்தை

By செய்திப்பிரிவு

செஞ்சி சந்தைமேட்டில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இன்று தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து செஞ்சி சந்தைக்கு விற்பனைக்காக குறைந்த அளவிலான ஆடுகளை கொண்டு வந்தனர். இவைகளை வாங்க வியாபாரிகள் குறைந்த அளவே வருகை தந்தனர்.ஒரு ஆடு சுமார் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால் தீபாவளி ஆட்டு சந்தை வெறிச்சோடியது.

இதுகுறித்து ஆடு வாங்க வந்தவர்கள் கூறுகையில், "கரோனா தொற்றால் வாரசந்தை நடைபெறாமல் இருந்த காலகட்டத்தில் வியாபாரிகள் கிராமப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆடுகளை வாங்கி சென்றனர். தற்போதும் வியாபாரிகள் கிராமங்களுக்கு நேரில் சென்று வாங்கி செல்வதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக இருந்தது" என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்