கிசான் நிதியுதவி முறைகேடு வேளாண் அதிகாரி ஆய்வு

By செய்திப்பிரிவு

பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் தகுதியற்ற போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. போலி பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது, இப்பணியினை கண்காணித்திட விழுப்புரம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக, சென்னை வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் வேளாண் கூடுதல் இயக்குநராக பணியாற்றும் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விழுப்புரம் அருகே காணை.கோழிப்பட்டு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் முறைகேடாக பெற்ற தொகையினை இம்மாத இறுதிக்குள் செலுத்திட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். காணை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்