அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்த்திடுக கடலூர் ஆட்சியர் அறிவுரை

By செய்திப்பிரிவு

அதிக ஒலி எழுப்பும் பட்டாசு களைத் தவிர்த்து, தகுந்த விழிப்புணர்வுடன் தீபாவளியைக் கொண்டாடுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து போதிய அளவில் விழிப் புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்கள் குறைந்த ஒலி, குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

தகுந்த இறுக்கமான உடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். சிறியவர்கள் வெடிக்கும் போது, பெரியவர்கள் அருகில் இருப்பது அவசியம்.

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண் டும். கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்