சிவகங்கை அருகே பெரியஒக்குப்பட்டி கிராமத்தில் 8 ஆண்டுகளாக பெரியாறு பாசன நீர் திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியஒக்குப்பட்டி கிராமம், மதுரை மாவட்ட எல்லையையொட்டி அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள குளிரன் கண்மாய் மூலம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கு பெரியாறு பாசன நீரைக் கொண்டுவர கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கண்மாய்க்கு 8 ஆண்டுகளாக பெரியாறு தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை.
அதேநேரம், பெரியஒக்குப்பட்டிக்கு அருகேயுள்ள மதுரை மாவட்ட கிராமங்களான நாயத்தான்பட்டி, அம்பலகாரன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு பெரியாறு பாசன நீர் திறக்கப்படுகிறது. இதனால் பெரியஒக்குப்பட்டி விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெரியஒக்குப்பட்டி விவசாயிகள் கூறியதாவது: முந்தைய காலத்தில் நாயத்தான்பட்டி, அம்பலகாரன்பட்டிக்கு பெரியாறு பாசன நீர் திறக்கும்போதே எங்கள் கண்மாய்க்கும் திறக்கப் பட்டது. காலப்போக்கில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் கிராமத்தின் அம்பலகாரன்பட்டி ஆற்று கால்வாய் அருகிலேயே உள்ள நற்கணி கண்மாயையும் ஆற்று கால்வாயுடன் இணைக்க மறுக்கின்றனர் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago