ஈரோடு நகரப்பகுதியில் நேற்று சாரல் மழை பெய்த நிலையிலும், கடைவீதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டியது.
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டம் இருந்த நிலையில், காலை 11 மணியளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
தீபாவளிப் பண்டிகைக்காக ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க ஈரோடு கடைவீதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் விற்பனை களைகட்டியது. மழையில் நனைந்தவாறே பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். ஈரோடு நகரில் நேற்று மாலை வரை குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஈரோடு புறநகர் பகுதிகளிலும், மழைப்பொழிவு இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago