தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் நெல்லையில் களைகட்டிய கடைவீதிகள் கோவில்பட்டியில் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் நேற்று மழை பெய்தபோதும், தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மழை காரணமாக பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தது. சிறுவர்களுக்கான பிளாஸ்டிக் துப்பாக்கி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மழையால் பூக்கள் வரத்து குறைந்திருந்தது. இதனால் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் பிச்சிப்பூ ரூ.50-ல் இருந்து ரூ.200 ஆகவும், சம்பங்கி ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்திருந்தது. கதம்ப மாலை 3 முழம் ரூ.20-க்கு விற்பனையானது. முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து உள்ளிட்ட பண்டங்கள் தலா ரூ.5-க்கும், காரம், இனிப்புகள் கொண்ட 1 கிலோ பார்சல் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கடந்த 4 நாட்களாக துணிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று ஜவுளி, மளிகை, பட்டாசு மற்றும் பூக்கடைகளில் மக்கள் குவிந்தனர்.

இதனால், கோவில்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பூங்கா மேற்கு சாலை, கதிரேசன் கோயில் சாலை, எட்டயபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன. டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வரத்து குறைந்த நிலையில் பிச்சிப்பூ நேற்று கிலோ ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்