அதிமுகவில் கோஷ்டி பூசல் இருக்க கூடாது கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேச்சு

By செய்திப்பிரிவு

அதிமுகவில் கோஷ்டி பூசல் இருக் கக் கூடாது என கலசப்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி தி.மலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் நடைபெற்றது. அரிசி, இனிப்பு, கோழி, குக்கர் மற்றும் பட்டாசுகளை வழங்கி கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கி னார். அப்போது, நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றியதால் நான் வெற்றி பெற்றேன்.

அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக கலசப்பாக்கம் தொகுதி உள்ளது. விரைவில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதிமுகவில் கோஷ்டி பூசல் இருக்கக் கூடாது. கலசப்பாக்கம் தொகுதிக்கு யாரை வேட்பாளராக தலைமை நிறுத் தினாலும், அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கலசப்பாக் கம் தொகுதிக்கு தேவையான அடிப் படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமியிடமிருந்து தொகுதி மக்க ளுக்காக பெற்று கொடுத்துள்ளேன்.

பருவதமலை அடிவாரத்தில் மகளிர் கலைக் கல்லூரி அமைக்கவும், ஜமுனா மரத்தூரை சுற்றுலாத்தலமாக மாற் றவும் அறிவிப்பு வெளியாகும். கலசப் பாக்கம் தொகுதிக்கு தடை இல்லாமல் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அடுத்த தீபாவளி அன்று யார் பொறுப்பில் இருப்பார்கள் என தெரியாது. நான், இருக்கும் வரை அதிமுக தொண்டர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகிறேன்” என்றார்.

இதில், மாவட்ட கலைப் பிரிவு செய லாளர் துரை, ஒன்றிய செயலாளர்கள் திருநாவுக்கரசு (கலசப்பாக்கம்), தவமணி (புதுப்பாளையம் கிழக்கு), புருஷோத்தமன் (மேற்கு), பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஆறுமுகம், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் செம்பியன், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் மண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்