வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குழந்தைகள் நண்பர்கள் வாரம் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குழந்தைகள் நண்பர்கள் வார விழா தொடங்கி வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சைல்ட்லைன் 1098, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் குழந்தைகள் நண்பர்கள் வாரம் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு கையில் கயிறு கட்டி மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் குழந்தை கள் தினத்தை முன்னிட்டு வரும் 19-ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையதளம் மூலம் ஏற்படுத்தப் படும்’’ என்றார். பின்னர், சைல்ட் லைன் 1098 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளை ஆட்சியர் வெளியிட்டார். பின்னர், குழந்தைகளுக்கு இனிப்புகள், நினைவு பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், சைல்ட்லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், குழந்தைகள் நல குழும தலைவர் சிவகலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்ற குழந்தைகள் நண்பர்கள் வாரம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவ, மாணவிகள் கையில் கயிறு கட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் திவ்ய தர்ஷினி பேசும்போது, ‘‘குழந்தைத் திருமணம், காணாமல் போன குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், ஆதரவற்ற குழந் தைகள், பாலியல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் என பல்வேறு வகையில் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது’’ என்றார். பின்னர், சைல்ட் லைன் 1098 விழிப் புணர்வு துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளை ஆட்சியர் வெளியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்