வானூர் அருகே இடையன்சாவடியில் விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

வானூர் வட்டம் இடையன் சாவடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

இடையன்சாவடி கிராமத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தையே வாழ்வாதா ரமாக கொண்டு வாழ்ந்து வருகி றோம்.

எங்கள் கிராமத்தை சேர்ந்த பல பகுதிகள் ஏற்கெனவே ஆரோவில் சர்வதேச நகரத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களை கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த வார இறுதியில் திடீரென உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப் போவதாக கூறி மின்வாரியத் துறையினர் அதற்கான களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின் கோபுரங்கள் கட்டமைக் கப்படுவதாக கூறப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே களஆய்வு மேற்கொண்டனர்.

எங்கள் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பள்ளி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானத்தை ஒட்டிய பகுதியில் துணை மின் நிலையம் அமைய உளளது.

ஆய்வு செய்யும் முன் மின் வாரிய அதிகாரிகள் தகவல் தெரியப்படுத்தியிருந்தால், எங்கள் இழப்புகளையும், குறை களையும் எடுத்துச்சொல்ல ஏதுவாக இருந்திருக்கும்.

விவசாய நிலங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி அரசு தரிசு நிலங்கள், ஓடை புறம்போக்கு இடங்கள் வழியாக மின்கோபுரங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்