ஈரோட்டில் குற்றச்சம் பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியும், மாறுவேடத்திலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் மக்கள் ஜவுளிகள் வாங்கவும், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும் கடைவீதிகளில் குவிந்துள்ளனர். ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடைவீதி பகுதியில் ஏற்கெனவே உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் கவனத்துடன் இருக்க ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மூன்று இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு, கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது.
முக்கியமான 15 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
திருட்டைத் தடுக்கும் வகையில் குற்றப்பிரிவு போலீஸார் 12 பேர் மாறுவேடங்களில் பேருந்துகளில் பயணம் செய்தும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளிலும் கண்காணித்து வருகின்றனர். பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்தும் கண்காணித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago