திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியே வழங்கப்படுகிறது பிளாஸ்டிக் அரிசி அல்ல என ஆட்சியர் விளக்கம்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமக்களுக்கு சரியான விகிதத்தில் ஊட்டச்சத்துகள் கிடைக்க ஏதுவாக, கடந்த அக்.1-ம் தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக மக்கள் மத்தியில் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசியே வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்கப் பெறுகின்றனர்.

செறிவூட்டப்பட்ட அரிசி வெள்ளை நிறமாக இருப்பதால், பொதுமக்கள் இதை பிளாஸ்டிக் அரிசி என்றோ, கலப்பட அரிசி என்றோ கருத வேண்டாம். இந்த அரிசியைப் பெற்று, உணவு சமைத்து உட்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்