திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கோரி ஆன் லைனில் விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை யாகவும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி மேற் படிப்பு உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப் படையிலான கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, மத்திய அரசின் www.scholerships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வி யாண்டில் உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் இணைய தளத்தின் மூலமாக விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்புகொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago