திருவண்ணாமலையில் அமைக் கப்பட்ட அறிவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் தி.மலை அடுத்த வேங்கிக்கால் ஏரிக்கரை அருகே (ஆட்சியர் அலுவலகம் முன்பு) ரூ.3 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி திறந்து வைத்தார். அப்போது, பணிகள் முழுமை பெறாததால், மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை.
இந்நிலையில், நிலுவையில் இருந்த பணிகள் முடிவடைந்ததும், ஆட்சியர் கந்தசாமி முன்னிலையில் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று முன்தினம் மாலை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் கந்தசாமி கூறும்போது, “மக்கள் பயன் பாட்டுக்கு அறிவியல் பூங்கா கொண்டு வரப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கரோனா தடுப்பு வழிகாட்டி விதி முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பூங்காவுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 10 வயதுக்கு உட் பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூங்காவில் அனுமதி இல்லை. அதேபோல், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான வர்களுக்கும் அனுமதி கிடையாது.
பூங்காவுக்குள் உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. குடிநீர் கொண்டு வரலாம். பூங்கா உள்ளே எச்சில் துப்பக்கூடாது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago