விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் 8,466 பேருக்கு ரூ.45.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் தமிழக முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்

By செய்திப்பிரிவு

விருதுநகரில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் 8,466 பயனாளி களுக்கு ரூ.45.36 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

கரானோ பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கே.பழனிசாமி தலை மையில், விருதுநகரில் நேற்று மாலை ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஆய்வு நடத்தினார். முன்னதாக, 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித்துறை,முன்னாள் படை வீரர் நலத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.28.74 கோடி மதிப்பிலான 30 நிறைவடைந்த கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், பொதுப் பணித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.11.36 கோடி மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அப்பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் அரசு திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில், அமைச் சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ஆட்சியர் இரா.கண்ணன், எஸ்.பி. பி.பெரு மாள், எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்