முகக்கவசம் அணியாமல் வந்த 260 பேருக்கு காவல் துறையினர் கரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த 260 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணிவதன் அவசியம், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வெளியே வருவது என அலட்சியம் கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago