திருச்சி பெல் ஊழியர்கள் கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் ரூ.10.70 கோடி வங்கித் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி பாரத மிகு மின் (பெல்) ஊழியர்கள் கூட்டுறவு வங்கியின் 54-வது பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து வங்கித் தலைவர் ஏ.வில்லியம் பீட்டர் பேசியது:

தமிழகத்தில் ஏடிஎம் கார்டு வசதியுடன் கூடிய முதல் ஊழியர் கூட்டுறவு வங்கி இதுவாகும். 10.03.1967-ல் தொடங்கப்பட்டு, கடந்த 54 ஆண்டுகளாக பெல் ஊழியர்களுக்கு சேவையாற்றி வரும் இந்த வங்கி, தொடர்ந்து லாபத்தில் செயல்பட்டு வருகிறது.

கடந்த நிதியாண்டில் இந்த வங்கி ரூ.10.70 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 11.92 சதவீதம் அதிகம். கடந்த நிதியாண்டு இறுதியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,129 ஆக உள்ளது.

பங்குத்தொகை ஆண்டு தொடக்கத்தில் ரூ.51.97 கோடி யாகவும், இறுதியில் ரூ.54.76 கோடியாகவும் உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 5.37 சதவீதம் கூடுதலாகும் என்றார்.

கூட்டத்தில் வங்கியின் துணைத் தலைவர் இளங்கோவன், மேலாண்மை இயக்குநர் பால கணேசன், பொது மேலாலர் ஆனந்தன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்