வேலூர் மாநகரப் பகுதிகளில் குற்றச் செயல்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டுள்ள 270 சிசிடிவி கண் காணிப்பு கேமராக்களின் செயல் பாடுகளை வேலூர் சரக டிஐஜி காமினி நேற்று தொடங்கி வைத்தார்.
வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லாங்கு பஜார், மெயின் பஜார், சுண்ணாம்புக்கார தெரு, காந்திரோடு, சிஎம்சி மருத்துவ மனை, ஆற்காடு ரோடு, காட்பாடி ரோடு, தோட்டப்பாளையம், கொணவட்டம், சேண்பாக்கம் உள் ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் கடைகளும் உள்ளன.
வெளியூர் மற்றும் வெளிமாவட் டங்களில் இருந்து வரும் மர்ம நபர்கள் வர்த்தக நிறுவனங்கள் இயங்கும் பகுதிக்குள் மக்களோடு மக்களாக நுழைந்து கைவரிசை காட்டுகின்றனர். திருட்டு மற்றும் வழிப்பறி குற்றச்சம்பவங்களை கண்காணிக்க போதுமான கண்காணிப்பு கேமராக்கள் மாநகர பகுதியில் இல்லாததால் குற்ற வாளிகள் எளிதாக தப்பி விடுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து, வேலூர் மாநகரப் பகுதிகளில் முக்கிய இடங்களில் காவல் துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான கண் காணிப்பு அறை வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் துறை மற்றும் வணிகர் சங்கம் பங்களிப்புடன் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் 270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.
இப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து, கண்காணிப்பு கேமராக் களின் செயல்பாடுகள் தொடக்க நிகழ்ச்சி வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். வேலூர் சரக டிஐஜி காமினி தலைமை வகித்து, மாநகரில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 270 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, ‘‘வேலூர் மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, ரவுடீசம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடை யாளம் காண இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும். வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இதற்கான பிரத்யேக கண்காணிப்பு அறை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணிநேரமும் காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago