விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 17-ம்தேதி முதல் திரையரங்குகள் மூடப் பட்டன.
238 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுதல் வழக்கம்போல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விழுப்புரம் நகரில் உள்ள6 திரையரங்குகளில் ஒரு திரையரங்கு மட்டும் நேற்று திறக்கப்பட்டது. ஆங்கில திரைப்படம் திரையிடப்பட்டது. மக் களிடம் போதிய வரவேற்பு இல்லை. அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா எனவிழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந் திரன் திரையரங்கில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட் டால் ரசிகர்கள்கூட்டம் வழக்கம் போல வரும் என திரையரங்கு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கடலூர் திரையரங்கில்
இலவச அனுமதி
கடலூர் மாவட்டத்தில் உள்ள 60 திரையரங்குகள் நேற்று திறக்கப் பட்டன. முகக்கவசம் அணிந்து வந்த ரசிகர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.ரசிகர்களை கவர கடலூர் கிருஷ்ணாலயா திரையங்கில் தீபாவளி வரை இலவச காட்சி என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago