வாரிசு சான்றிதழுக்காக ரூ.5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த சிறுவலூரைச் சேர்ந்தவர் முத்துசாமி (60). இவரது தந்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டி, சிறுவலூர் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். சான்றிதழ் அளிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி (46) கேட்டதாகக் கூறப்படுகிறது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்ட முத்துசாமி, இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திவ்யா தலைமையிலான குழுவினர் ஏற்பாட்டின் படி, நேற்று மதியம் ரூ.5000 லஞ்சப் பணத்தை வி.ஏ.ஓ. கந்தசாமியிடம் முத்துசாமி வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கந்தசாமியைக் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago