பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக நாளைக்குள் (12-ம் தேதி) முதல்வர் முடிவை அறிவிப்பார். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 16 ஆயிரம் மாணவர்கள் நீட் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாகும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago