காவல் துறைக்கு இனி செயலியில் தகவல் தெரிவிக்கலாம்

By செய்திப்பிரிவு

திருச்சி சரகத்திலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான தகவல் தொடர்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்துவதற்காக 'விர்ச்சுவல் காப்' (virtual cop) என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் தொடக்க விழா திருச்சி சுப்பிரமணியபுரத் திலுள்ள ஆயுதப்படை வளாகத் தில் நேற்று நடைபெற்றது.

மத்திய மண்டல ஐஜி எச்.எம்.ஜெயராம் முன்னிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா இந்த செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி, செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எஸ்பி (பொ) செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக் கம் செய்யும் வகையில் வடி வமைக்கப் பட்டுள்ள இந்த செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நிலவும் போக்குவரத்து விதிமீறல்கள், குழந்தை கள், பெண்கள் மீதான வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம் தொடர்பு டைய பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்