தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு ரோஸ்மேரி தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.யோகராஜ், செயலாளர் டி.லியோலாரன்ஸ் உட்பட 300-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் சேர்க்க வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை நிறுத்தி பிறப்பித்த அரசாணை எண் 37, 116 ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் நியமன அலுவலர் களான தாளாளர், செயலாளர் ஆகியோர் முன் அனுமதியுடன், உயர் கல்வி பயின்ற அனைவருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு ஏற்ப உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி இணைப் பிரிவை அனுமதிக்கும் அரசாணை எண் 148-ஐ எவ்வித நிபந்தனையுமின்றி நடைமுறைப்படுத்தி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் இலவச ஆங்கில வழிக் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத் தித் தர வேண்டும். ஆசிரியர் பணி யில் சேர்வதற்கான வயது வரம்பை ஏற்கெனவே இருந்ததைப்போல 57 ஆக மீண்டும் மாற்ற வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள நிரப்பத்தக்க அனைத்துப் பணி யிடங்களையும் தமிழ்நாடு அரசு உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘அரசாணை 438-ன்படி மருத்துவ படிப்பில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகள் குறித்து குறிப்பிடப்படவில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை தமிழ்நாடு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்காமல், அரசாணை எண் 438-ல் அரசு உதவிபெறும் பள்ளிகளையும் சேர்த்து, திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். இடஒதுக்கீட்டு அளவையும் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்