8 மாதங்களுக்கு பின் நெல்லையில் அறிவியல் மையம், அருங்காட்சியகம் திறப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மாவட்ட அறிவியல் மையம் மற்றும் அரசு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இம்மையம் 8 மாதங்களுக்குப்பின் நேற்று பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

நுழைவாயி லில் கை கழுவிவிட்டு வரும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நுழைவு கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் பார்வையாளர்களுக்கு ஒருமுறை பயன்பாட்டு கையுறை வழங்கப்படுகிறது. சமூக இடைவெளியை குறிக்கும் வகையில் காட்சியரங்குகளில் குறியீடுகள் இடப்பட்டுள்ளன. பொத்தான்களை கைவிரல் களால் அழுத்தாமல் சென்சார்கள் (உணர்விகள்) மூலம் இயங்கும் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. கரோனா குறித்த தகவல் பலகை களும் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு அனுமதியில்லை

இதுகுறித்து மாவட்ட அறிவியல் மைய அதிகாரி எஸ்.எம். குமார் கூறும்போது, “முதற்கட்டமாக பூங்கா மற்றும் காட்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வாரத்தின் அனைத்து நாட்களிலும் அறிவியல் மையத்தை பார்வையிடலாம். ஊரடங்கு காலத்தில் அறிவியல் மையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பார்வையாளர்களின் பாதுகாப்புக் காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

10 வயதுக்கு கீழ் உள்ளவர் களையும், 65 வயது கடந்தவர் களையும் அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.5-ம், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15-ம், பொதுமக்களுக்கு ரூ. 20-ம் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அறிவியல் மையத்தை sciencecentrenellai@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 0462-2500256, 9442994797 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

இதேபோல் பாளையங் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகமும் பார்வையாளர் களுக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்