கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு 70 சதவீத மானியத்தில் மின்சார புல் வெட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மலை அடுத்த வேங்கிக் காலில் உள்ள ஆவின் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஆவின் பொது மேலாளர் இளங் கோவன் தலைமை வகித்தார். துணை பொது மேலாளர் நாச்சியப்பன் முன் னிலை வகித்தார். மேலாளர் காளியப் பன் வரவேற்றார். 60 பால் உற்பத்தி யாளர்களுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.14.40 லட்சம் மதிப்பில் புல்வெட் டும் இயந்திரத்தை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, “ரூ.24 ஆயிரம் மதிப்பிலான புல் வெட்டும் கருவிக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த கருவி மூலம் எளிதாக புற்களை நறுக்கி கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கலாம்” என்றார்.
இதில், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் நைனாகண்ணு, ஒன்றிய குழு முன்னாள் தலைவர்கள் கோவிந்தராஜ், ஜானகிராமன், முன்னாள் ஒன் றிய கவுன்சிலர் கலிய பெருமாள், நிலவள வங்கி தலைவர் சம்பத், கூட்டுறவு வங்கி தலைவர் தொப் லான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago