வேலூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

வேலூரில் மத்திய அரசுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பாக மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் விரோத சட்டங்கள், விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் பீடி தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பான ஆர்ப் பாட்டத்துக்கு வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காத்தவராயன், ஐ.என்.டி.யு.சி. தேசிய பீடி தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் சேகர், தொ.மு.ச. பொதுக்குழு உறுப்பினர் சலாம் ஆகியோர் தலைமை தாங் கினர்.

கோரிக்கை குறித்துசி.ஐ.டி.யு. தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளனத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன், தொ.மு.ச. கலைநேசன் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த் தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற் படுத்தும் தொழிலாளர் சட்டங்கள் திருத்தியதை ரத்து செய்ய வேண்டும், கரோனா காலத்தில் பீடி தொழிலாளர்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும், பீடி தொழிலாளர்களுக்கு படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்