தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு விண்ணப் பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டுக்கான தொழில் முனைவோர் மேம்பாடு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா 5 அலகுகள் வீதம் மொத்தம் 30 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு நடப்பாண்டில் முதற் கட்டமாக 18 பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கும் பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் 1,000 கோழிக்குஞ்சுகள், கோழி தீவனம் மற்றும் முட்டை அடைகாத்தல் கருவிகள் வழங்கப்படும். ஆகவே, கால்நடை பராமரிப்புத்துறையின் கோழி வளர்ப்பு திட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பயன் பெறாத பெண் பயனாளிகள் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத் தினர், பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங் கப்படும்.
எனவே, இத்திட்டத்தை பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago