தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும் நேரம் நீட்டிக்கப்படாது அமைச்சர் கருப்பணன் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நீட்டிக்க முடியாது, என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ் தொகை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பவானியில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோட்டில் தொழிற்சாலைக் கழிவு களை, பொதுவெளியில் கொட்டிய சாய, சலவை ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகள், விதிமுறைகளை மீறி கழிவுகளை வெளியேற்றினால், அந்த ஆலைகளை நிரந்தமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்.

தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கர்நாடக மாநிலத்தின் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து தமிழக முதல்வர் கர்நாடக அரசிடம் பேசி வருகிறார். இதன் மூலம், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும்.

தீபாவளியன்று காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசுகள் வெடிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நீட்டிக்க முடியாது. அதேபோல், தமிழக அரசு அனுமதித்துள்ள பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், வெடிக்கவும் வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்