அரசு கலைக்கல்லூரி மதிப்பெண் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் முறையீடு செய்தனர். இதையடுத்து நவ.18-ம் தேதிக்குள் மறுசீரமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் வழங்கப் படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு கலைக்கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. செமஸ்டர் தேர்வுகளை கல்லூரி நிர்வாகமே நடத்தி செமஸ்டர் மற்றும் பட்ட, பட்டமேற்படிப்பு ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல்களை வழங்கி வருகிறது.
இதில் கடந்த 2016-2019-ம் ஆண்டில் இளங்கலை மற்றும் 2017- 2019-ம் ஆண்டில் முதுநிலை படித்து முடித்த 1,171 மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டு ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல் வழங் கப்பட்டது.
இக்கல்லூரியில் கடந்தாண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவர் ஒருவர் பணிக்கு விண்ணப் பித்தபோது, செமஸ்டர் மதிப் பெண் பட்டியலில் உள்ள ஜிபிஏ எனும் தகுதிப் புள்ளி சராசரி (கிரேடு பாய்ன்ட் ஆவரேஜ் ) மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில் உள்ள தகுதிப் புள்ளி சராசரி ஆகியவற்றுக்கிடையே வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த மாணவர் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, கடந் தாண்டு இளநிலை, முதுநிலை படிப்பு முடித்த 1,171 பேரின் மதிப்பெண் பட்டியல்களை சரிபார்த் ததில், 611 பேரின் செமஸ்டர், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல்களில் மாறுபாடு இருப்பது தெரியவந்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவியிடம் நேற்று முறையிட்டனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி கூறியது: கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்ட சாப்ட்வேரில் செமஸ்டர் மதிப்பெண் பட்டியலில் உயர் மதிப் பெண்ணுக்கு ஜிபிஏ எனும் தகுதிப் புள்ளி சராசரி உயர்த்தப்பட்ட நிலையில் ஒட்டு மொத்த மதிப்பெண் பட்டியலில் இது மாறாததால் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி ஏற்பட் டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ, மாணவிக ளுக்கும் நவ.18-ம் தேதிக்குள் மறுசீரமைக் கப்பட்ட மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago