20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டம்

20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி அரசுப் போக்குவரத் துக் கழக தொழிற்சங்க கூட்டமைப் பினர் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர் களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்காமல், 10 சதவீத போனஸ் வழங்கியதை கண்டிப்பது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். தீபாவளி அட்வான்ஸ் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலக வளாகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச மண்டல பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில் தொமுச பழனிசாமி, அப்பாவு, சிஐடியு கருணாநிதி, சீனிவாசன், ஏஐடியுசி சுப்பிரமணியன், நேருதுரை, ஐஎன்டியுசி துரைராஜ், மாதவன், டிடிஎஸ்எப் பெருமாள், சுப்பிரமணியன், ஹெச்எம்எஸ் செல்வம், ஏஏஎல்எல்எப் மதியழகன், வையாபுரி, எம்எல்எப் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகத் தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 400 பேர் போராட் டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து தொழிற் சங்கத்தினர் கூறும்போது, “20 சதவீத போனஸை அரசு வழங் காவிட்டால், தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்க மாட்டோம்” என்றனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் தொமுச பேரவை துணைச் செய லாளர் எஸ்.பாண்டியன், சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.மணி மாறன், ஏஐடியுசி சம்மேளன துணை பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், ஐஎன்டியுசி பேரவை துணைத் தலைவர் வைத்தியநாதன், எச்.எம்.எஸ். பொதுச் செயலாளர் முருகேசன், எம்எல்எப் பேரவை செயலாளர் எஸ்.பாலு, நிர்வாக பணியாளர் சங்க துணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டல அலுவலகங்களுக்கு உட்பட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டல பொதுச்செயலாளர் எம்.வேலுச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.கணேசன், ஏஏஎல்எல்எப் பொதுச் செயலாளர் நாகராஜன், டிடிஎஸ்எப் தலைவர் பி.எல்.குழந்தைவேலு உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டத்தில் தொமுச மாவட்டத் தலைவர் அ.ரத்தினம், செயலாளர் எம்.கணபதி, ஏஐயுடிசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் ரத்தினவேல் ஆகியோர் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்